Home நாடு ஜூன் 8 – தொடங்குகிறது தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு

ஜூன் 8 – தொடங்குகிறது தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு

1049
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜூன் திங்கள் 8-ஆம் தேதி தொடங்கி, 10-ஆம் தேதிவரை முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் ஆசிரியர்களுக்கு இது பயனுள்ள மாநாடாக அமையும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமானோரைக் கவரும் நோக்கில் இந்த மாநாட்டுக்கான பதிவுக் கட்டணம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 300 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தங்குமிடம் தேவை இல்லையெனில் 100 ரிங்கிட் மட்டும் செலுத்தினால் போதுமானது.

மன்னர் மன்னன் மருதை

இந்த மாநாட்டுக்கான பதிவு நாள் 31 மே 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேல்விவரத்திற்கு www.childtamil.com என்ற வலைப்பக்கத்தை அணுகலாம் என மாநாட்டுக்கான செயலாளர் மன்னர் மன்னன் மருதை தெரிவித்துள்ளார்.

நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல்; கற்றல் கற்பித்தல் முறைகளில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் போன்ற குழந்தை இலக்கியங்களைப் பயன்படுத்தும் உத்திகளை ஆராய்தல்; கணினி ஊழிக்கு ஏற்ற முறையில் குழந்தை இலக்கிய வடிவம், உள்ளடக்கம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவந்து, மின்னூல் வடிவில் இப்படைப்புகள் வருதலை ஊக்கப்படுத்தல்; புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் நிலையை ஆராய்தல் – பள்ளிகளிலும், பள்ளி நூலகங்களிலும் இடம்பெற வகைசெய்யும் வண்ணம் குழந்தைகளின் அகவளர்ச்சியைத்தூண்டும் தரமான குழந்தை – சிறுவர் இலக்கிய நூல்கள் உருவாக ஊக்கம் நல்குதல்; பள்ளிகளிலும் வீட்டிலும் குழந்தைகள் தாமே வாசித்து மகிழும் பழக்கத்தை ஏற்படுத்தும் வழிகளை ஆராய்தல்; – போன்ற அம்சங்களை நோக்கங்களாகக் கொண்டு இந்தக் குழந்தை இலக்கிய மாநாடு நடைபெறுகிறது.

செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை

Ohms-Thiagarajan-இதற்கிடையில் முதலாவது உலகக் குழந்தை இலக்கிய மாநாட்டுக்காக செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் (படம்) தனது பங்களிப்பாக 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்கியுள்ளார்.