Home உலகம் இந்தியா வரும் இந்தோனிசியர்களுக்கு 30 நாட்கள் இலவச விசா

இந்தியா வரும் இந்தோனிசியர்களுக்கு 30 நாட்கள் இலவச விசா

904
0
SHARE
Ad
இந்தோனிசிய அதிபருடன் நரேந்திர மோடி

ஜாகர்த்தா – இந்தோனிசியாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில் ஜாகர்த்தாவில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்த மோடி, இனி இந்தியாவுக்கு வருகை தரும் இந்தோனிசியர்களுக்கு 30 நாட்களுக்கான இலவச குடிநுழைவு அனுமதி (விசா) வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன் மூலம் இந்தியா வரும் இந்தோனிசியர்கள் இனி 30 நாட்கள் வரை இலவசமாக இந்தியாவில் தங்கியிருக்கலாம்.

#TamilSchoolmychoice

“உங்களில் பலர் இந்தியாவுக்கு இதுவரை வந்ததில்லை என நான் அறிவேன். உங்களையெல்லாம் அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவுக்கு வருகை தரும்படி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்” என்றும் மோடி ஜாகர்த்தாவில் அறிவித்தார்.

கும்பமேளா என்பது உலகிலேயே அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாகக் கருதப்படுகின்றது.

இதற்கிடையில் நாளை வியாழக்கிழமை (மே 31) மோடி சில மணி நேரங்கள் கோலாலம்பூர் வந்து பிரதமர் துன் மகாதீரையும், துணைப் பிரதமர் வான் அசிசா-அன்வார் இப்ராகிம் தம்பதியரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.