Home வணிகம்/தொழில் நுட்பம் குற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா மறுத்தது

குற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா மறுத்தது

1077
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறை ஏர் ஆசியாவுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா நிறுவனம் மறுத்திருக்கிறது.

இன்று கோலாலம்பூர் பங்கு சந்தைக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ஏர் ஆசியா நிறுவனம் தனது மறுப்புகளை பதிவு செய்திருக்கிறது. ஏர் ஆசியா கோலாலம்பூர் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.

அனைத்துலக பயணச் சேவைகளுக்கான அனுமதியைப் பெறுவதற்காக சில அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏர் ஆசியா கையூட்டு வழங்கியதாக இந்தியாவின் காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பில் இந்தியத் தொலைக்காட்சிகள் இன்று புதன்கிழமை விரிவான விவாதங்களை நடத்தின.

“எங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதிலும், எங்களின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையிலும் விரிவான விசாரணைகள் இன்றி எடுக்கப்பட்ட முடிவுகளை நாங்கள் கண்டிப்பாக சட்டரீதியாக எதிர்த்துப் போராடுவோம்”  என ஆர் ஆசியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையவற்றை என்றும் ஏர் ஆசியா கூறியது.

டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகர்களில் ஏர் ஆசியா தொடர்புடைய ஐந்து இடங்களில் சோதனைகள் நடத்தி பல ஆவணங்களை இந்தியக் காவல் துறையினர் கைப்பற்றினர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.