Home வணிகம்/தொழில் நுட்பம் ராஜ் வாழை இலை உணவகத்தில் லீ சோங் வெய் பங்குதாரரா?

ராஜ் வாழை இலை உணவகத்தில் லீ சோங் வெய் பங்குதாரரா?

1074
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சுகாதாரமற்ற முறையில் அசுத்தமான சாக்கடைத் தண்ணீரில் சாப்பிடும் தட்டுகளை அதன் ஊழியர்கள் கழுவும் காணொளி சமூக ஊடங்களில் பரவியதைத் தொடர்ந்து தலைநகர் பங்சாரிலுள்ள  ராஜ் வாழை இலை உணவகம் அமுலாக்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (மே 30) மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த உணவகத்தின் பங்குதாரராக தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் செயல்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராஜ் உணவகத்தை நடத்தும் இண்டர் கொம்பஸ் சென்டிரியான் பெர்ஹாட் (InterCompass Sdn Bhd) நிறுவனத்தின் 3 இயக்குநர்களில் ஒருவராக லீ சோங் வெய் (படம்) பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் என நிறுவனங்களுக்கான பதிவிலாகா ஆவணங்கள் தெரிவிப்பதாக ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் அவரைத் தொடர்பு கொண்ட போது “அது நான் இல்லை” என அவர் கூறியதாகவும் ஸ்டார் தெரிவித்திருக்கிறது.

ராஜ் வாழை இலை உணவகமும், லீ சோங் வெய் முன்பு அந்த உணவகத்தின் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார் என்றும் ஆனால் குறிப்பிட்ட சம்பவத்துக்கு முன்னரே அவர் தனது இயக்குநர் பதவியிலிருந்து விலகி விட்டதாகவும், உணவகத்தின் அன்றாடப் பணிகளில் அவர் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

இதற்கிடையில் ராஜ் வாழை இலை உணவகம் தனது செயலுக்காக தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் இந்த உணவகத்தைச் சோதித்த சுகாதார அமைச்சு 3 புகார்களை அந்த உணவகத்தின் மீது சுமத்தியுள்ளது. சுகாதார அமைச்சில் உணவகத்தைப் பதிவு செய்யாதது, தனது ஊழியர்களுக்கு டைபாயிட் தடுப்பூசி போடாதது, உணவுகளைக் கையாளும் பயிற்சிகளை ஊழியர்களுக்கு வழங்காதது போன்ற 3 புகார்களை அந்நிறுவனத்தின் மீது சுகாதார அமைச்சு சுமத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து மூடப்பட்ட அந்த உணவகத்தின் அனுமதி இரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது