Home வணிகம்/தொழில் நுட்பம் மை இஜி மற்றும் 2 நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இரத்து

மை இஜி மற்றும் 2 நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இரத்து

1507
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசாங்கத்தின் பல்வேறு இலாகாக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட இணைய சேவையாக செயல்பட்டு வந்த மைஇஜி (MyEG Services Sdn Bhd) நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக குடிநுழைவுத் துறை தொடர்பான பல்வேறு கட்டணங்கள், சேவைகள் மைஇஜி நிறுவனத்தின் மூலமாகவே இணையம் வழி நடைபெற்றன.

மேலும் போக்குவரத்து இலாகா தொடர்பான பல்வேறு சேவைகளும், கட்டணங்களும், அபராதங்களும்கூட மைஇஜி நிறுவனத்தின் மூலமாகவே செலுத்தப்படுகின்றன.

#TamilSchoolmychoice

இந்த கட்டமைப்பு குறித்து பல்வேறு கண்டனங்கள் எழுப்பப்பட்டு வந்தாலும் அரசாங்கம் இந்த நிறுவனத்தின் சேவையைத் தொடர்ந்து வந்தது.

மைஇஜி தவிர, குடிநுழைவுத் துறைக்கு இணையம் வழி சேவைகளை வழங்கி வந்த இமான் ரிசோர்சஸ் சென்டிரியான் பெர்ஹாட் (Iman Resources Sdn Bhd) புக்கிட் மெகா சென்டிரியான் பெர்ஹாட் (Bukti Megah Sdn Bhd) ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதியோடு இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும்.