Home நாடு மலேசியாவில் யோகா தினம்: 3,000 பேர்களுடன் உலக சாதனையை நோக்கி!

மலேசியாவில் யோகா தினம்: 3,000 பேர்களுடன் உலக சாதனையை நோக்கி!

1046
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை வியாழக்கிழமை ஜூன் 21-ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மலேசியாவிலும், ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்த அதன் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மலேசியாவுக்கான இந்தியத் தூதரகமும், தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் இணைந்து தலைநகர் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் நாளை வியாழக்கிழமை காலை (ஜூன் 21) 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடத்தும் இந்த யோகா தினக் கொண்டாட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒரே நேரத்தில் ஒரு சேர யோகா பயிற்சியில் ஈடுபட வைப்பதன் மூலம் ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தத் தாங்கள் எதிர்பார்ப்பதாக, இந்நிகழ்ச்சியின்  ஏற்பாட்டாளரான டாக்டர் சி.வி.ஜெயந்தி (படம்) தெரிவித்தார். டாக்டர் ஜெயந்தி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக செயல்படுகிறார்.

டாக்டர் சி.வி.ஜெயந்தி – அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

ஜெயந்தி மனுஷி யோகா என்ற இயக்கத்தின் நிறுவனருமாவார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் ஒரே நேரத்தில் 3,000 பேர்கள் யோகா பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதன் முறை எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஒரு புதிய உலக சாதனை ஏற்படுத்தப்படுவதோடு, யோகா குறித்த விழிப்புணர்வும், ஆர்வமும் மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகளும் உருவாகும்.

யோகா பயிற்சியில் ஈடுபடுவர்களுக்கு இந்தியத் தூதரகத்தின் சிறப்புச் சான்றிதழும் வழங்கப்படும். இந்த யோகாப் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் முகநூல் இணைப்பின் வழி தங்களைப் பதிந்து கொள்ளலாம்.

https://www.yogadaymalaysia.com/events/international-yoga-day-celebration-at-batu-caves-2018

இந்த நிகழ்ச்சிக்கு மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மிருதுள் குமார் சிறப்பு வருகை புரிவார்.

யோகாவின் பலன்கள், விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகள் ஆகியவை குறித்த யோகா பயிற்சி நிபுணர்களின் சிறப்புரைகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணையத் தளத்தில் தொடர்பு கொள்ளலாம்:

https://www.yogadaymalaysia.com/