Home உலகம் உலகக் கிண்ணம்: – சவுதி அரேபியா 2 – எகிப்து 1 (முழு...

உலகக் கிண்ணம்: – சவுதி அரேபியா 2 – எகிப்து 1 (முழு ஆட்டம்)

1038
0
SHARE
Ad

மாஸ்கோ – உலகக் கிண்ணப் போட்டிகளில் திங்கட்கிழமை மலேசிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

ஒரு ஆட்டத்தில் உருகுவே-இரஷியா நாடுகள் மோதின. இதில் 3-0 கோல் எண்ணிக்கையில் உருகுவே இரஷியாவை வெற்றி கொண்டது.

மற்றொரு ஆட்டத்தில் சவுதி அரேபியாவும் எகிப்தும் களமிறங்கின.

#TamilSchoolmychoice

இதில் சவுதி அரேபியா – எகிப்து நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தில் சவுதி அரேபியா 2 கோல்கள் அடிக்க, எகிப்து ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க, 2-1 கோல் எண்ணிக்கையில் சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

‘ஏ’ பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் விளையாடிய இரண்டு நாடுகளுமே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

சவுதி அரேபியா 3-வது இடத்தை ‘ஏ’ பிரிவில் அடைய, எகிப்து நான்காவது இடத்தை எட்டிப் பிடித்தது.