Home நாடு “கோரா” திரைப்பட குழுவினரின் சந்திப்போடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்!

“கோரா” திரைப்பட குழுவினரின் சந்திப்போடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்!

958
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மின்னலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் மணி 12 தொடக்கம் 2 மணி வரை மண்ணின் மைந்தர்களின் பாடல்கள், கலைஞர்கள் படைப்புகள், சந்திப்புகள் என ஒலியேறும்.

அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சியில், கோரா திரைப்படத்தின் இயக்குனர் தேவேந்திரன், நடிகர்கள் கர்ணன், வேலரசன், நடிகை சாரா பாஷ்கின் இவர்களின் சுவராசியமான சந்திப்பு ஒலியேறும்.

கோரா திரைப்படம் எடுக்கும் போது அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்கள், படத்தின் சுவை அனுபவங்களையும் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள போகிறார்கள்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், “வா லேடி” பாடல் வெளியீடு குறித்து கலைஞர்களின் சந்திப்பும் இடம்பெறும். பாடலை பாடியிருக்கும் ஸ்தார் ரானா, ஷான், சர்மிளா  இவர்களில் குதுகலமான சந்திப்பு கேட்டு ரசிக்கலாம். அதே நேரத்தில், மலேசிய பாடல்களில் முதல் ஜந்து நிலைகளில் இருக்கும் புத்தம் புதிய பாடல்களை நேயர்களை மகிழ்ச்சி படுத்தும்.

கலை வட்டார செய்திகள், கலைஞர்களின் படைப்புகளான குறுந்தட்டு வெளியீடு, திரைப்படம் வெளியீடு குறித்த தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887497 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது minnalfm@rt.gov.my மின்ன்ஞ்சல் அனுப்பலாம். மலேசிய கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”