Home நாடு நஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும்

நஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும்

937
0
SHARE
Ad
நீதிபதி முகமட் சோபியான் அப்துல் ரசாக்

கோலாலம்பூர் – நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் உடனடியாக அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

பகாங் மாநிலத்தில் ஐந்து தவணைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு தவணைகள் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கும் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முகமட் சோஃபி அப்துல் ரசாக்கின் இளைய சகோதரர் அந்த நீதிபதி என்பதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் வர்கீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

நஜிப்பும் அதே பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அம்னோவின் முன்னாள் தேசியத் தலைவர் என்பதும் முன்வைக்கப்படும் மேலும் சில குறைகூறல்களாகும்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை நஜிப் நான்கு குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அதில் மூன்று குற்றச்சாட்டுகள் எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பிலான 42 மில்லியன் நிதி மீதான நம்பிக்கை மோசடி குற்றங்களாகும்.

நான்காவது குற்றச்சாட்டு இதே விவகாரம் தொடர்பில் அதிகார மீறல் குற்றச்சாட்டாகும்.