Home உலகம் பிரான்ஸ் 2 – உருகுவே 0 (முழு ஆட்டம்)

பிரான்ஸ் 2 – உருகுவே 0 (முழு ஆட்டம்)

806
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் இரவு 11.55) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தற்போது கால் இறுதிச் சுற்றை எட்டியுள்ளன. கால் இறுதிப் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் தென் அமெரிக்க நாடான உருகுவே மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இரண்டும் இன்று வெள்ளிக்கிழமை களத்தில் இறங்கின.

மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிய ஐந்தே நிமிடங்கள் இருக்கும் போது, 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் விளையாட்டாளர் வாரேன் ஒரு கோல் அடிக்க பிரான்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்தது.

பின்னர் 61-வது நிமிடத்தில் பிரான்ஸ் விளையாட்டாளர் கிரீஸ்மேன் மற்றொரு கோலைப் புகுத்த பிரான்ஸ் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்தில் கால் பதிக்கிறது.