Home நாடு துணையமைச்சர் ஹனிபா மைடின் மயங்கி விழுந்தார்

துணையமைச்சர் ஹனிபா மைடின் மயங்கி விழுந்தார்

819
0
SHARE
Ad
முகமட் ஹனிபா மைடின் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா – இன்று திங்கட்கிழமை காலையில் பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பிரதமர் துறை துணையமைச்சரும் சிப்பாங் அமானா நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் ஹனிபா மைடின் திடீரென மயங்கி விழுந்தார்.

பிரதமர் துறை ஊழியர்களிடையே பிரதமர் என்ற முறையில் நடைபெறும் மாதாந்திரக் கூட்டத்தில் துன் மகாதீர் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஹனிபா மைடின் மயங்கி விழுந்தார்.

அவருக்கு உடனடியாக முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அவரது உடல் நலம் குறித்து மேல்விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த இரண்டு தவணைகள் வெற்றி பெற்ற 50 வயதான முகமட் ஹனிபா மைடின், அண்மையில் பிரதமர் துறை துணையமைச்சராக சட்டப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

ஹனிபா மைடின் ஒரு வழக்கறிஞருமாவார்.