Home நாடு 8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது

8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது

1233
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) 8 புதிய செனட்டர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நம்பிக்கைக் கூட்டணியின் பலம் நாடாளுமன்ற மேலவையில் அதிகரித்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையை நம்பிக்கைக் கூட்டணி இன்னும் கொண்டிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நேற்று நியமிக்கப்பட்ட 8 புதிய செனட்டர்களில் அறுவர் நம்பிக்கைக் கூட்டணியால் முன்மொழியப்படவர்களாவர். இருவர் திரெங்கானு மற்றும் கிளந்தான் மாநிலத்தின் சார்பாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பாஸ் கட்சிக்கு ஆதரவானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

17 ஜூலை 2018 பதவியேற்ற புதிய 8 செனட்டர்கள்

நேற்று பதவி ஏற்ற புதிய செனட்டர்களில் வேதமூர்த்தி பிரதமர் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜோகூர் ஜசெக தலைவரான லியூ சின் தோங் துணை தற்காப்பு அமைச்சராகவும், திரெங்கானு மாநிலத்தின் டத்தோ ராஜா கமாருல் பஹ்ரின் வீடமைப்பு, ஊராட்சி துறையின் துணையமைச்சராகவும், பெர்சாத்து கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவர் மார்சுக்கி யாஹ்யா துணை வெளியுறவு அமைச்சராகவும், திரெங்கானு பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டாக்டர் முகமட் ரட்சி முகமட் ஜிடின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்த நியமனங்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் அதிகரித்தாலும், இன்னும் அவர்கள் பெரும்பான்மை பெறவில்லை. இதன் காரணமாக மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்ற மேலவைக்கு அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும்போது அவரை நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் இவ்வாறு நடைபெற்றதில்லை என்றாலும், இனி புதிய நாடாளுமன்ற அரசியல் சூழ்நிலைகளால் அவ்வாறு நடைபெறக் கூடிய சாத்தியம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.