Home நாடு பிகேஆர் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும் வான் அசிசாவே துணைப் பிரதமர்

பிகேஆர் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும் வான் அசிசாவே துணைப் பிரதமர்

1024
0
SHARE
Ad
வான் அசிசா

கோத்தா கினபாலு – தற்போது துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சித் தலைவரான வான் அசிசா, எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், தொடர்ந்து துணைப் பிரதமராக பதவி வகித்து வருவார் என பிகேஆர் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தல்கள் குறித்து சபா மாநில பிகேஆர் கட்சியினருக்கான விளக்கமளிப்புக் கூட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) கோத்தா கினபாலுவில் நடத்திய பின்னர் நசுத்தியோன் இஸ்மாயில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சித் தலைமைக்குப் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து வான் அசிசா துணைப் பிரதமராகத் தொடர்வாரா என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது. கடந்த ஜனவரியில் பக்காத்தான் கூட்டணியின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, துன் மகாதீர் பிரதமராகவும் டாக்டர் வான் அசிசா துணைப் பிரதமராகவும் தொடர்வார் – பின்னாளில் மகாதீருக்குப் பின்னர் அன்வார் இப்ராகிம் பிரதமராகப் பொறுப்பேற்பார் – என்ற புரிந்துணர்வு முடிவு கடைப்பிடிக்கப்படும் என்றும் நசுத்தியோன் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

எனவே, வான் அசிசா தொடர்ந்து துணைப் பிரதமராக நீடிப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.