Home இந்தியா சாகிர் நாயக்: கேள்வியைத் தவிர்த்தார் மலேசியத் தூதர்

சாகிர் நாயக்: கேள்வியைத் தவிர்த்தார் மலேசியத் தூதர்

1610
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஹிடயாட் அப்துல் ஹமிட் சாகிர் நாயக் குறித்த இந்திய ஊடகத்தினரின் கேள்விகளைத் தவிர்த்துள்ளார். டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மலேசியத் தூதரிடம் “சாகிர் நாயக் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?” எனக் கேட்டபோது, “நோ கமெண்ட்ஸ் (கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை)” என மலேசியத் தூதர் தெரிவித்த காணொளிக் காட்சியை டைம்ஸ் நௌ ஒளிபரப்பியது.

இதற்கிடையில், சாகிர் நாயக் மீது சிவப்பு நிற பயணத் தடை (Red Corner Notice) விதிக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையினரிடம் விடுத்துள்ள கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்தும் இந்திய அரசாங்கம் இண்டர்போலிடம் சுட்டிக் காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சாகிர் நாயக் மீது சிவப்பு நிற பயணத் தடை விதிப்பது குறித்து இண்டர்போல் ஆராய்ந்து வருவதாகவும் டைம்ஸ் நௌ தொலைக்காட்சி தெரிவித்தது.