Home கலை உலகம் பிக் பாஸ் : ஷாரிக் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் : ஷாரிக் வெளியேற்றப்பட்டார்

1024
0
SHARE

சென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு (ஆகஸ்ட்5) தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஷாரிக் வெளியேற்றப்பட்டார். இவர் பிரபல நடிகர் ரியாஸ் கான்னின் மகனாவார்.

மற்ற பங்கேற்பாளர்கள் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தனர். மற்றொரு பங்கேற்பாளரான ஐஸ்வர்யா, ஷாரிக் வெளியேறிய அறிவிப்பைத் தொடர்ந்து அதிகமாக அழுதார். அவரை மற்றவர்கள் ஆறுதல் படுத்தினர்.

இந்தக் காட்சிகள் கொண்ட தொகுப்பை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 6) அஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஸ்டார் விஜய் 224 அலைவரிசையில் ஒளியேறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய இரசிகர்கள் கண்டு இரசிக்கலாம்.

Comments