Home நாடு “3 இலட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச் செய்தியா?”

“3 இலட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச் செய்தியா?”

871
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச்செய்தி என்றும், 3853 பேருக்கான ஆவணங்கள் மட்டுமே உள்துறை அமைச்சிடம் இருப்பதாகவும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் சார்பில் உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஜிஸ் பின் ஜமான் நாடாளுமன்ற மேலவையில் இன்று திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.

கடந்த காலங்களில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை
இல்லை என்ற குற்றச்சாட்டை முன்னாள் எதிர்கட்சியும், இன்னாள் ஆளுங்கட்சியுமான பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் முன்னெடுத்து வந்தது பொய் என்பது இதன் வழி நிரூபணம் ஆகியுள்ளது என சில வட்டாரங்கள் தெரிவித்தன.

3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்ற விவகாரம் தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் மேலவையில் கேள்வி எழுப்பிய போதே  உள்துறை துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

உள்துறை அமைச்சின் துணையமைச்சரே 3 லட்சம் பேர் அடையாள அட்டை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது பொய்ச்செய்தி என்பதை ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டதா என பலர் கருத்துரைத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற மேலவையில் கேள்வி எழுப்பிய டி.மோகன் பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்து கூறுகையில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் துணையமைச்சரின் கூற்றுப்படி நாடற்றவர்கள் விவகாரத்தில் மக்களுக்கு தெளிவு பிறந்துள்ளது. இந்த வேளையில் இந்த விவகாரம் தொடர்பில் இத்தனை காலம் இந்திய சமுதாய மக்களிடம் தவறான தகவல்களைக் கூறிவந்த பக்கத்தான் இந்தியத் தலைவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென அவர் கூறினார்.

தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தின் போது மஇகாவின் மூலம் மைடப்தார் திட்டத்தின்வழி பதிவு செய்த பலருக்கு ஆவணங்கள் சரி செய்யப்பட்டு குடியுரிமை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இந்த எஞ்சியுள்ள 3853 பேரின் ஆவணங்களும் உரிய முறையில் சரி செய்து குடியுரிமை வழங்கவும் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என மோகன் மேலும் தெரிவித்தார்.

அதே வேளையில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் வாக்குறுதிப்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நீல நிற அடையாள அட்டை கொடுக்கப்படும் என்பது நிறைவேற்றப்பட வேண்டும். ஏனெனில் 3 லட்சம் பேர் நாடற்றவர்கள் என்ற பொய்யான செய்தி போல இதுவும் அமைந்து விடக்கூடாது இதனை நிறைவேற்றுவது எளிது எனவும் மோகன் மேலும் தெரிவித்தார்.