Home கலை உலகம் பிக் பாஸ் 2 : டேனியல் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ் 2 : டேனியல் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

2185
0
SHARE
Ad
பிக்பாஸ் 2 தமிழ் – டேனியல்

சென்னை – ஏற்கனவே சமூக ஊடகங்களில் கணித்தது போல் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒளியேறிய ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் டேனியல் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பங்கேற்பாளர் தொலைக்காட்சி இரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். பொதுவாக ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற்றப்படப் போகிறார் என்பது இறுதி வரை இரகசியமாக வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தில் ஒளியேறும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவிப்பார்.

ஆனால், இந்த முறை இந்த வாரம் நடிகர் டேனியல் வெளியேற்றப்படுவார் என்ற தகவல்கள் முன்கூட்டியே சமூக ஊடகங்களில் கசிந்து விட்டன. அந்தத் தகவல்களும் உண்மை என்பதுபோல் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் டேனியல் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட மூவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதில் முன்னதாக பாலாஜி காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஜனனி, டேனியல் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது உறுதியானது.

இறுதியில் டேனியல் வெளியேற்றப்பட ஜனனி இந்த வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்கிறார்.