Home நாடு 2019 முதல் 1,050 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம்

2019 முதல் 1,050 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம்

1038
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக், லாபுவான் என நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் 1,050 ரிங்கிட்டாக நிர்ணயம் செய்யப்படும் என பிரதமர் துன் மகாதீர் நேற்று அறிவித்தார்.

தற்போது தீபகற்ப மலேசியாவில் இருக்கும் 1,000 ரிங்கிட் குறைந்த பட்சம் சம்பளம் இதன் மூலம் 50 ரிங்கிட் உயர்த்தப்படுகிறது. 920 ரிங்கிட்டாக இருக்கும் சபா, சரவாக் மாநிலங்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் 130 ரிங்கிட் உயர்த்தப்படுகிறது.

இந்த சம்பள விகிதம் மணிக்கு 5 ரிங்கட் 05 காசு சம்பளத்துக்கு ஈடானதாகும்.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் துறையின் அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

பக்காத்தான் அரசாங்கம் 14-வது பொதுத் தேர்தலில் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். அடுத்த 5 ஆண்டுகளில் மலேசியத் தொழிலாளர்களின் குறைந்த பட்ச சம்பளம் 1,500 ரிங்கிட் வரை உயர்த்தப்படும் என்பதை பக்காத்தான் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வழங்கியிருந்தது.