Home உலகம் 7 கிலோ எடையில் பிறந்த ராட்சத குழந்தை

7 கிலோ எடையில் பிறந்த ராட்சத குழந்தை

106
0
SHARE

34650ed5-13a8-41f5-ab89-1ac5b65b7318_S_secvpf.gifலண்டன், மார்ச் 29- இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் சுமார் 7 கிலோ கிராம் எடையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

செல்டெனம் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தைக்கு ஜார்ஜ் கிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்குழந்தை 6 வாரங்களுக்கு முன்னர் பிறந்தது.

பிறக்கும் போது குழந்தையின் எடை 15 பவுண்டுக்கும் அதிகமாகும். (அதாவது 7 கிலோ எடை). இதனால் பிரசவத்தின் போது குழந்தையின் தாய் பெரும் சிரமத்துக்கு ஆளானார். எனவே அவருக்கு சுமார் 20 டாக்டர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்தனர்.

குழந்தை பிறந்த போது அவன் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் வெறும் 10 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் ஜார்ஜ் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.  மேலும் பிறந்து 3 முதல் 6 மாதம் வரை குழந்தைகள் அணியும் ஆடைகளையே ஜார்ஜுக்கு அணிவிப்பதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Comments