Home இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கைகளை சரி பார்க்கும் பணி ஆரம்பம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கைகளை சரி பார்க்கும் பணி ஆரம்பம்

910
0
SHARE
Ad

4e25365b-712f-40d0-a44c-d524f529463a1திருப்பதி,ஜன.19 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் தங்கம், வெள்ளி நகைகள் சரி பார்க்கும் பணி தொடங்கியது.

தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்படும் இந்த நகைகள் சரிபார்க்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது.

கருவறையான ஆனந்த நிலையத்தில் இருந்து திருவாபரண பெட்டிகள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீராமர் மேடையில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நிபுணர் குழுவினர் நகைகளை ஆய்வு செய்தனர். முடிவில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நகைகள் சரி பார்க்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

பதிவு புத்தகத்தில் உள்ளபடி நகைகள் உள்ளதா? அதில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டுள்ளதா? அன்றைய நிலவரப்படி நகைககளின் எடை உள்ளதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வுப்பணிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.