Home இந்தியா திருமுருகன் காந்தி சிறையில் மயங்கி விழுந்தார்

திருமுருகன் காந்தி சிறையில் மயங்கி விழுந்தார்

787
0
SHARE
Ad

சென்னை – கடந்த 45 நாட்களாக வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மே17- இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு (படம்) திடீரென சர்க்கரை அளவும், இரத்த அழுத்தமும் குறைந்ததைத் தொடர்ந்து சிறையில் மயங்கி விழுந்தார்.

தமிழக அரசு திருமுருகன் காந்தி மீது தொடுத்திருக்கும் சில வழக்குகளின் காரணமாக அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். 45 நாட்களாகத் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் பகலில்கூட சிறையில் இருக்கும் மற்றவர்களைச் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும் மே-17 இயக்கம் புகார் கூறியுள்ளது. மேலும் சுகாதாரமற்ற அறையில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் மே 17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் திருமுருகன் காந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவரது உடலின் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.