Home கலை உலகம் பேட்ட : ரஜினியுடன் இணைகிறார் சசிகுமார்

பேட்ட : ரஜினியுடன் இணைகிறார் சசிகுமார்

528
0
SHARE

சென்னை – கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி, படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டே போகிறது.

ஆகக் கடைசியாக வந்த தகவல்களின்படி நடிகரும் இயக்குநருமான சசிகுமார் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே, சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என பல பிரபலங்கள் இணைந்து படத்தின் சுவாரசியத்தைக் கூட்டியுள்ள நிலையில் தற்போது சசிகுமார் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது கௌதம் மேனன் இயக்கும் “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்து வருகிறார்.

டார்ஜிலிங், டேராடூன், லக்னோ, வாரணாசி என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments