Home நாடு “நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்

“நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்

920
0
SHARE
Ad
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பொதுக்கூட்ட மேடையில் அன்வார் – மகாதீர்…

போர்ட்டிக்சன் –  இரு பெரும் தலைவர்களான துன் மகாதீரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இன்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் இந்த இரு தலைவர்களும் கலந்து கொள்ளும் வரலாற்றுபூர்வ நிகழ்ச்சி இதுவாகும்.

ஆயிரக்கணக்கானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களும் கலந்து கொண்டனர். துணைப் பிரதமர் வான் அசிசா, நிதியமைச்சர் லிம் குவான் எங், தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு, ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இன்றையக் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்வார் இப்ராகிம் மகாதீர் முன்னிலையில் அவரது பங்களிப்புகள் குறித்து புகழ்ந்துரைத்தார். “மகாதீரிடம் எனது தந்தையைப் போல் பழகியிருக்கிறேன். அவரிடம் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறேன். அதே வேளையில் அவரை எதிர்த்துக் கடுமையாகப் போராடியும் இருக்கிறேன். ஆனால் இப்போது கூறுகிறேன். மலேசியாவுக்குத் தலைமையேற்று வழிநடத்துவதில் மிகச்சிறந்த தலைவர் மகாதீர்தான்” என அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் அவருக்குத் துணையாக நாடாளுமன்ற விவகாரங்களில் ஈடுபடுவேன் என்றும் கூறிய அன்வார் “நாடாளுமன்றம் என்பது வெறும் முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம் போன்று ஆகிவிடக் கூடாது. மக்களின் எண்ணங்களை – கருத்துகளைப் பிரதிபலித்துச் செயல்படுத்தும் களமாகத் திகழ வேண்டும். அதற்காகவே, போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய விரும்புகிறேன்” என்றார்.

தனக்காகப் பிரச்சாரம் செய்ய போர்ட்டிக்சனின் களமிறங்கிய மகாதீருக்கு அன்வார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.