Home நாடு சாஹிட் ஹமிடி மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்

சாஹிட் ஹமிடி மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்

965
0
SHARE
Ad

புத்ரா ஜெயா –  நேற்று புதன்கிழமை (அக்டோபர் 10) சுமார் 9 மணி நேர விசாரணையை எதிர்நோக்கிய முன்னாள் துணைப் பிரதமரும், அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, விசாரணையைத் தொடர்வதற்காக இன்று காலை காலை மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக அவர் வருகை தருவது இது 4-வது தடவையாகும்.

அகால் புடி அறவாரியம் (Akal Budi Foundation) தொடர்பில் 8 இலட்சம் ரிங்கிட் பணம் முறைகேடாகக் கையாளப்பட்டு, சாஹிட் மற்றும் அவரது மனைவிக்கான பற்று அட்டை (credit card) கடன்களை செலுத்தப் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் சாஹிட் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

மேலும் சாஹிட்டின் நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பிரம்மாண்டமான உல்லாச ஓய்வு விடுதி தொடர்பிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் வங்கிகளின் வழி பெற்ற பணம் தொடர்பிலும் சாஹிட் விசாரிக்கப்படுகிறார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.