Home நாடு பிகேஆர் தேர்தல்: 995 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி ரம்லி

பிகேஆர் தேர்தல்: 995 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி ரம்லி

751
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடைபெற்று வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் பேராக் மாநிலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலியை விட 995 வாக்குகளில் தான் முந்துவதாக ரபிசி ரம்லி (படம்) கூறியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற பேராக் மாநில அளவிலான வாக்களிப்பின் முடிவுகள் தனக்கே ஆச்சரியத்தை அளிப்பதாகவும், அதற்காக பேராக் பிகேஆர் பேராளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரபிசி தெரிவித்திருக்கிறார்.

பேராக் மாநிலத்தில் ரபிசி ரம்லி 6,700 வாக்குகள் பெற்ற வேளையில் அஸ்மின் 4,359 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் மாநிலத்தின் எஞ்சிய 6 தொகுதிகளுக்கான வாக்களிப்பு நடைபெறும் வேளையில் இதே போன்ற ஆதரவு ரபிசிக்குத் தொடர்ந்தால் அவரது வெற்றி உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபா, சரவாக் மாநிலங்களுக்கான தேர்தல்களும் இன்று நடைபெறுகின்றன.

இதுவரையில் நடைபெற்ற வாக்களிப்பில் ரபிசி 47,542 வாக்குகள் பெற்ற நிலையில், அஸ்மின் 46,547 வாக்குகள் பெற்று பின்தங்கியிருக்கிறார்.