Home உலகம் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடுகிறது

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடுகிறது

1032
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா இணங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நவம்பர் 14-ஆம் தேதிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

14-ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால், தேர்தலை சந்திக்க, ராஜபக்சே திட்டமிட்டு உள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும், மகிந்த ராஜபக்சேவும் ஒரே மேடையில் அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுள்ளார். எனவே, இலங்கையில் இரு பிரதமர்கள் – இரு சபாநாயகர்கள் என உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது.

பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே மக்கள் நலன் பயக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தமிழர் வாக்குகளைக் கவர்வதற்காக இத்தகைய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.

கூடவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சேயின் புதிய அரசாங்கத்திற்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் (படம்) அறிவித்துள்ளார்.

ராஜபக்சேயின் நியமனம் அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் எனவே சட்டவிரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசமைப்பின்படி பதவியிலிருக்கும் பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அதிபரிடம் இல்லை என்றும் முன்னர் அதிபருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது.