Home உலகம் ஜப்பானின் மிக உயரிய விருதைப் பெற்றார் மகாதீர்

ஜப்பானின் மிக உயரிய விருதைப் பெற்றார் மகாதீர்

885
0
SHARE
Ad

தோக்கியோ – ஜப்பானிய நாட்டின் மிக உயரிய விருது ஒன்றை அந்நாட்டின் மன்னர் அகிஹித்தோவிடம் இருந்து பெற்றதன் வழி அந்த விருதைப் பெறும் முதல் ஆசியத் தலைவர் என்ற சாதனையை துன் மகாதீர் நிகழ்த்தியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6) தோக்கியோவில் உள்ள இம்பீரியல் பேலஸ் எனப்படும் மன்னரின் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜப்பானிய மன்னரிடமிருந்து மகாதீர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அவருடன் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜப்பானுக்கும், மலேசியாவுக்கும் இடையில் நல்லுறவுகளை வளர்க்கப் பாடுபட்டவர் என்ற முறையில் மகாதீருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கிரேண்ட் கோர்டோன் ஆப் த ஆர்டர் ஆப் தெ பவுலோனியா பிளவர்ஸ் (Grand Cordon of the Order of the Paulownia Flowers) என்ற பெயரில் இந்த விருது வழங்கப்பட்டது.

மகாதீர் விருதளிப்பின்போது கறுப்பு நிறத்திலான மலாய் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். அவரது துணைவியார் சித்தி ஹஸ்மா அலி பாஜூ குரோங் பாணியிலான மலாய் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

விருதளிப்புக்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே “மகாதீர் ஜப்பானின் நீண்டகால நண்பர். 1961 முதல் சுமார் 100 தடவைகளுக்கு மேல் அவர் ஜப்பானுக்கு வருகை தந்திருக்கிறார். அவரது கிழக்கை நோக்குவோம் கொள்கைக்கு ஏற்ப இதுவரையில் 16 ஆயிரம் மாணவர்களும், பயிற்சியாளர்களும் ஜப்பானுக்கு வந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள்” என்று கூறினார்.