Home நாடு இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர்: “மாத இறுதியில் விலகுவேன்” மஸ்லீ

இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர்: “மாத இறுதியில் விலகுவேன்” மஸ்லீ

804
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – தனக்குப் பதிலாக புதிய தலைவரை நியமிக்கும் படலம் நிறைவடைந்ததும், அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் (படம்) அறிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுக்கும், பெர்சாத்து கட்சியின் முடிவுக்கும், டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் அறிவுரைக்கும் தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த முடிவுகளை மதிப்பதாகவும் கூறியுள்ள மஸ்லீ, இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிவடைந்ததும், புதிய தலைவரை நியமிக்கும் படலம் நிறைவடைந்ததும் அந்தப் பொறுப்பிலிருந்து இந்த மாத இறுதியில் விலகப் போவதாக மஸ்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருக்கிறார்.

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து இப்போதே விலகிக் கொள்ள வேண்டும் என்றும் இனியும் அவர் தாமதிக்கக் கூடாது என்றும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

#TamilSchoolmychoice

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்லீ அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியும் அமைச்சரவையும் ஏற்கனவே தெளிவாக முடிவு செய்துவிட்டதாக மொகிதின் தெரிவித்திருந்தார்.

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு மாணவர்கள் தரப்பிலும், பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் நிகழ்ந்தன.

அவரது அலுவலகத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், அழுத்தங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் அவர் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார்.