Home தேர்தல்-14 கேமரன் மலை தொகுதியில் ஊழல் விசாரணை தொடங்கியது

கேமரன் மலை தொகுதியில் ஊழல் விசாரணை தொடங்கியது

1198
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா:  14-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ஊழல் நடைபெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் அசாம் பாகி விசாரணைக் கோப்புகள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டதாகவும், வழக்கில் ஏதேனும் முன்னேற்றம் இருந்தால் பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் என்எஸ்டி இணைய ஊடகம் பதிவுச் செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) தேர்தல் நீதிமன்றம், கேமரன் மலையில் மஇகாவின் வேட்பாளர் சி. சிவராஜின் தேர்தல் வெற்றியை இரத்துச் செய்தது.  ஜனநாயக செயல் கட்சியின் வேட்பாளர்,  எம்.மனோகரன் தேர்தலில் வாக்குகள் விலை கொடுத்துப் பெறப்பட்டன வாங்கப்பெற்றது என்று குற்றஞ்சாட்டியதால் இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக, தேசிய முன்னணியின் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அப்படி ஒரு வேளை கேமரன் மலை தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மீண்டும் மஇகாவிற்கே அவ்வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.