Home உலகம் 34 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து-ஈரான் விமான சேவை

34 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து-ஈரான் விமான சேவை

457
0
SHARE
Ad

air-memphisகெய்ரு, ஏப்ரல் 1- டெக்ரானில் கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 34 ஆண்டுகளாக எகிப்து நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை துண்டிக்கப்பட்டது.

எகிப்தில் முபாரக் ஆட்சி கடந்த 2010-ம் ஆண்டு வீழ்த்தப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானம் விடப்படவில்லை.

#TamilSchoolmychoice

தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு எகிப்து அதிபராக முகமது முர்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நல்லதொரு மாறுதல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான போக்கு ஏற்பட்டது.

ஈரான் அதிபர் மகமது அகமதிநேஜாத், எகிப்துக்கு கடந்த மாதம் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இருந்து ராமி லக்காவின் ஏர் மெம்பிஸ் விமானம், ஈரான் தலைநகர் டெக்ரான் நோக்கி புறப்பட்டுச் சென்றது.