Home நாடு ரோஸ்மாவின் பணமோசடி விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாறுகிறது!

ரோஸ்மாவின் பணமோசடி விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாறுகிறது!

1362
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிரான 17 கள்ளப்பணப் பரிமாற்ற மோசடி குற்றச்சாட்டுகள் அமர்வு (செசன்ஸ்) நீதிமன்றத்திலிருந்து, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அமர்வு நீதிமன்ற நீதிபதி அசூரா அல்வி அறிவித்தார்.

2013-ம் ஆண்டு முதல் 2017 வரை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் 7.1 மில்லியன் ரிங்கிட்டை வைத்திருந்ததற்காக 12 குற்றச்சாட்டுகளும், அவரது வருமான வரி அறிக்கையில் இவ்வைப்புகளை அறிவிக்காத காரணத்தினால் மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் ரோஸ்மா மீது சுமத்தப்பட்டுள்ளன.

அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ரோஸ்மா விசாரணை கோரி இருக்கிறார்.