Home நாடு 2019 முதல் மின்னியல் பாடப்புத்தகங்கள் அறிமுகம்

2019 முதல் மின்னியல் பாடப்புத்தகங்கள் அறிமுகம்

1143
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு முதல், படிவம்  ஒன்றிலிருந்து மூன்று வரையிலான பாடப்புத்தகங்களை மின்னியல் முறையில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் முயற்சியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். 2021-ஆம் ஆண்டு முதல் படிவம் நான்கிலிருந்து ஆறு வரையிலான பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.

இத்திட்டத்தினை நன்கு ஆராய்ந்து கண்காணித்த பின்பே, மேலும் இதனை விரிவுபடுத்துவதற்கான செயல்முறைகள் எடுக்கப்படும் என தியோ கூறினார். 

படிவம் ஒன்று முதல் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு ஊடாடும் (Interactive) புத்தகங்கள் 2020-ல் கிடைக்கப்பெறும் எனக் கூறிய அவர், வகுப்பறைக்கு அப்பால் உள்ள அறிவினைப் பெறுவதற்கு இம்முறை உதவியாக இருக்கும் என்றார்.

#TamilSchoolmychoice

பல காலமாக புத்தகப்பை சுமை குறித்த புலம்பல்கள் மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பிரச்சனையாக இருந்ததை நினைவுப்படுத்தி, தற்போது இத்திட்டத்தின் வழி சுமுகமான தீர்வைக் காண இயலும் என்றார் தியோ.