Home நாடு அமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்!

அமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்!

867
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சரவாக்கில் 160 மில்லியன் பெறுமானமுள்ள தங்கும் விடுதியை வாரிய இயக்குனர்களின் அனுமதியின்றி வாங்கியக் குற்றச் செயலுக்காகவும், மூன்று மில்லியன் ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றக் குற்றத்திற்காகவும், முன்னாள் பெல்டா தலைவர் இசா சாமட் இன்று, அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். இவ்விரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி அசூரா அல்வி முன்னிலையில், இசா மறுத்தார்.

பெல்டா நிர்வாக இயக்குனர்களின் ஒப்புதல் இல்லாமல் கூச்சிங்கில் உள்ள மெர்டேகா பேலஸ் ஹோட்டல் & சூட்ஸ்வாங்குவதற்கு அவர் அனுமதி தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

குற்றவியல் சட்டம் பிரிவு 409-ன் கீழ், அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இசாவுக்கு 20 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

ஷாரிகாட் கெகாசான் அபாடி பிராப்பர்டீஸ் செண்டெரியான் பெர்ஹாட் , நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, இக்வான் சாய்டெல் என்பவரிடமிருந்து மூன்று மில்லியன் ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டப் பிரிவு 16 (a) (A) கீழ் இசா குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இசாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், கையூட்டாகப் பெற்றப் பணத்திலிருந்து ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம்.