Home நாடு இன, மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்!- புசி ஹருண்

இன, மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்!- புசி ஹருண்

760
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முகமட் அடிப்பின் மறைவுக்கு எதிராக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட வேண்டாமென, மலேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் கடந்த மாதம் நடந்த கோயில் கலவரத்தில் காயமுற்று, நேற்று திங்கட்கிழமை மரணமடைந்த நிலையில், நாட்டின் ஒழுங்குமுறைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மக்கள் இன, மத சம்பந்தமான பிரச்சனைகளை தூண்டும் செயல்களில் ஈடுபட வேண்டாமென புசி நினைவுப்படுத்தினார்.

காவல் துறை சார்பாக, முகமட் அடிப்பின் குடும்பத்தாருக்கும்,  ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

பொது மக்களைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது தனது உயிரை அவர் தியாகம் செய்துள்ளார். அவரது மரணம் ஒரு பெரிய இழப்பு, மற்றும் அவர் எப்போதும் நாட்டின் வீரராகக் கருதப்படுவார்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இன்று நள்ளிரவு, அடிப்பின் மறைவுக்குப் பிறகு, முன்னெச்சரிக்கையாக, கூடுதல் காவல் அதிகாரிகள் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலையும், ஒன் சிட்டி வணிக வளாகத்தையும் பாதுகாக்கக் குவிக்கப்பட்டனர்.