Home உலகம் புழு வகை உயிரினத்திற்கு டொனால்டு டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டது!

புழு வகை உயிரினத்திற்கு டொனால்டு டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டது!

1219
0
SHARE
Ad
படம்: என்வைரோபில்ட் (EnviroBuild)

பனாமா: புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நீர்நில புழுவகை உயிரினத்திற்கு, பிரிட்டன் நிறுவனம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி, டொனால்டு டிரம்ப்பின் பெயரை வைத்துள்ளது. அந்த உயிரினத்தின் தன்மையானது, காலநிலைக்கு ஏற்றவாறு மாறும் என்பதால், அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் குறித்த கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் பாணியில் இப்பெயர் அப்புழுக்குச் சூட்டப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

டெர்மொபிஸ் டொனால்டுடிரம்பி (Dermophis Donaldtrumpi) என அப்புழு வகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. பனாமாவில் கண்டுபிடிக்கப்பட்ட இப்புழு, தரைக்கு கீழே, அதாவது மண்ணின் உள்ளேயே இருக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது என என்வைரோபில்ட் (EnviroBuild) நிறுவன இணை இயக்குனர் எய்டன் பெல் கூறினார்.

60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடல் பாகங்களை இழந்த இவ்வுயிரினம், தனது உணர்ச்சிக்கொடுக்கு (tentacles) மூலமாக இரையைக் கண்டுபிடிக்கிறது. இப்புழு வகை நீர்நில உயிரினமாகையால், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் எளிதில் பாதிக்கக்கூடியது. இதன் நேரடி விளைவாக இவ்வுயிரினம் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது என பெல் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

டிரம்ப் நீண்ட காலமாக காலநிலை மாற்றத்தை சந்தேகிப்பவராக அறியப்படுகிறார். உலக வெப்பமயமாதல் போன்ற கருத்துகள் ஏமாற்று வேலைகள் என அவர் 2013-ல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். கடந்த மாதம் பிற்பகுதியில், டிரம்ப் நான்காம் தேசிய காலநிலை மதிப்பீட்டு ஆராய்ச்சி அறிக்கையை நிராகரித்தார். அறிவியலாளர்கள் மத்தியில் இவரின் இப்போக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.