Home வணிகம்/தொழில் நுட்பம் ஆர்டிஎம், பெர்னாமா இணைந்து மின்னியல் முறையிலான சேவை அறிமுகம்

ஆர்டிஎம், பெர்னாமா இணைந்து மின்னியல் முறையிலான சேவை அறிமுகம்

1275
0
SHARE
Ad

ஜோகூர்: மலேசியத் தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா), மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனம் (ஆர்டிஎம்) மற்றும் மலேசியத் தகவல் துறை இடையே மின்னியல் (டிஜிட்டல்) சேவையை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். தற்போதைய காலக் கட்டத்தில் உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவதிலும், இணையத்தள செய்தித் தளங்களின் சவால்களை சமாளிப்பதிலும் இந்த கூட்டு முயற்சியானது முக்கியமானதாக அமையும் என்றார்.

தற்போது நிறைய இணையத்தளப் பக்கங்கள் அதிகமானச் செய்திகளை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவதிலும், “முக்கியச் செய்தி” எனும் பகுதியை உருவாக்கி, அதன் வாயிலாக மக்களை ஈர்கின்றனர்”, என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த கூட்டு முயற்சியை அறிவிப்போம் என அமைச்சர் கூறினார். தன்னைப் பொறுத்தமட்டில், நடக்கும் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் இந்த மூன்று செய்திப் பிரிவுகளும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.