Home நாடு முகமட் அடிப்: நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்!

முகமட் அடிப்: நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்!

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மீது தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும், நான்கு சந்தேக நபர்களை காவல் துறையினர் விசாரணைக்கு உட்படுத்துவர் என காவல் துறைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நூர் ரசிட் இப்ராகிம் தெரிவித்தார்.

தற்போது கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவ்வழக்கில் சாட்சியமளிக்க நான்கு பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த வழக்குத் தொடர்பாக நிறைய சான்றுகள் சேகரிக்க வேண்டியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களை தேடும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நவம்பர் 27-ம் தேதி, சீ பீல்ட் கோயில் வளாகத்தில் நடந்த கலவரத்தில் முகமட் அடிப், குறிப்பிட்ட ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டு, கடந்த செவ்வாயன்று மருத்துவமனையில் காலமானார்.

இதற்கிடையில், இந்த வழக்குத் தொடர்பாக மேலும் சில சாட்சியங்களை காவல் துறையினர் தேடிவந்ததாகவும், தற்போது அவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் தங்களின் வாக்குமூலத்தைத் தந்துள்ளதாகவும் ரசிட் கூறினார்.