Home இந்தியா தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை!

தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை!

1054
0
SHARE
Ad

சென்னை: நாளை முதல் தமிழ் நாட்டில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி, உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்ட வேளையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி இந்த முடிவினை அறிவித்தார்.

நெகிழி பொருட்களின் பயன்பாடு மற்றும் அதன் தயாரிப்புக்கு தடை விதிப்பதாகவும், பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கும் மட்டும் நெகிழிப் பையை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து, மக்களும் வியாபாரிகளும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

நெகிழியின் அதிகமான பயன்பாட்டின் காரணத்தால், சுற்றுச் சூழலுக்கு மட்டும் பாதகத்தை ஏற்படுத்தாமல், அவற்றை எரிக்கும் போது வெளியேறும் நச்சுக் காற்றானது, மனித உயிர்க்கும் கேட்டினை விளைவிக்கிறது என அவர் தெளிவுப் படுத்தினார். மேலும், அவற்றை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.