Home கலை உலகம் பிரகாஷ் ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி

பிரகாஷ் ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி

653
0
SHARE
Ad

சென்னை – முக்கிய இந்திய மொழிகளில் அனைத்திலும் வில்லன், குணசித்திரம் என பல வேடங்களில் சொந்தக் குரலிலேயே நடித்து அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அண்மையக் காலத்தில் அடிக்கடி அரசியல், சமூகத் தளங்களில் பரபரப்பான முறையில், துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளியிட்டு வந்தவர்.

அதிலும் குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் துணிச்சலாக அவர் வெளியிட்ட கருத்துகள், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டன.

தற்போது இவரும் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும், விரைவில் போட்டியிடவிருக்கும் தொகுதியை அறிவிக்கவிருப்பதாகவும் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரகாஷ் ராஜ் தமிழ் நாட்டிலும் மிகுந்த பிரபலமான நடிகர்களில் ஒருவர். எனவே, அவர் தனது சொந்த மாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்து தனது தொகுதியைத் தேர்ந்தெடுப்பாரா அல்லது தமிழ் நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.