Home நாடு தொழிற்துறை வல்லுனர்களை உருவாக்குவதற்கு பினாங்கு அரசாங்கம் உதவும்!

தொழிற்துறை வல்லுனர்களை உருவாக்குவதற்கு பினாங்கு அரசாங்கம் உதவும்!

1413
0
SHARE
Ad

பட்டர்வொர்த்: மலேசிய உயர் கல்வி நிறுவனங்கள் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக திறமையான தொழிற் திறனாளர்களை உருவாக்க புதிய திட்டங்களை பல்வகைப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி. இராமசாமி கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில், பெரும்பாலும் பினாங்கில் உள்ள அனைத்துலகத் தொழிற்சாலைகளில், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற திறமையான மனிதவளத்துறை பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் பினாங்கில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு வருகைத் தந்த போது, சில தொழிற்துறை பயிற்சி நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்குவதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

நான்காம் தொழிற்துறை புரட்சி (தொழில் துறை 4.0) சகாப்தத்தில் உகந்த பணியாளர்களை உற்பத்தி செய்வதற்காக தொழிற்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு பினாங்கு அரசாங்கம் உதவிச் செய்யத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.