Home நாடு பினாங்கு துணை முதல்வர் இராமசாமியுடன் செல்லியல் சிறப்பு நேர்காணல்

பினாங்கு துணை முதல்வர் இராமசாமியுடன் செல்லியல் சிறப்பு நேர்காணல்

614
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாயிலாக, பினாங்கு சட்டமன்ற உறுப்பினராக, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக, பினாங்கு மாநிலத்தின் முதல் இந்திய துணை முதல்வராக பரிணமிக்கத் தொடங்கிய பேராசிரியர் பி.இராமசாமியின் போராட்டக் குரல் அப்போது முதல் இப்போது வரை, மலேசிய அரசியல், சமூகப் பிரச்சனைகளிலும், குறிப்பாக இந்தியர் குறித்த விவகாரங்களிலும் தொடர்ந்து தயங்காது ஒலித்து வருகிறது.

பிரச்சனையை நேரடியாக எதிர்கொண்டு – யாராக இருந்தாலும் – எந்தவித சமரசமும் இல்லாமல் தனது கருத்துகளைச் சொல்பவர் – பதிவுகளில் சொந்தமாக எழுதுபவர் இராமசாமி. 4 இந்திய அமைச்சர்கள் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து வலம் வந்தாலும், மற்ற இந்தியத் தலைவர்கள் பலர் அந்தக் கூட்டணியில் இருந்தாலும், தனது அனுபவத்தாலும், பரந்த கல்வி அறிவாலும், துணிச்சலுடன் வாதாடும் திறனாலும், இன்றும் நம்பிக்கைக் கூட்டணியின் ஒருமுகப்படுத்தப்பட்ட இந்தியத் தலைவராக – நம்பிக்கைக் கூட்டணியின் இந்தியர் குரலாகப் பார்க்கப்படுபவர் இராமசாமி.

செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் இராமசாமியுடன் நடத்திய – சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட – சிறப்பு நேர்காணலில் கீழ்க்காணும் அம்சங்கள் குறித்து தனது பரபரப்பான பதில்களை வழங்கினார் இராமசாமி:

  • பினாங்கு மாநிலத்தின் அடுத்த கட்ட முன்னேற்றப் பணிகள் என்ன?
  • பினாங்கு மாநிலத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள்
  • மற்ற மாநிலங்களிலும், தேசிய அளவிலும் இந்து அறப்பணி வாரியம் தேவையா?
  • பொதுத் தேர்தல் வாக்குறுதியான தமிழ் இடைநிலைப் பள்ளி, இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது?
  • நம்பிக்கைக் கூட்டணிக்கு என இந்தியத் தலைவர் என்ற ஒருவர் தேவையா?
  • 2019-ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் என்ன?
  • விடுதலைப் புலிகளின் தமிழீழ இயக்கம் குறித்த நிலைப்பாடு என்ன?
#TamilSchoolmychoice

விரிவாக பதிலளிக்கிறார் இராமசாமி!

செல்லியலில் விரைவில் இடம் பெறுகிறது – படிக்கத் தவறாதீர்கள்!