Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் 3 வங்கிகள் ஒன்றிணைகின்றன

இந்தியாவின் 3 வங்கிகள் ஒன்றிணைகின்றன

753
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் வங்கிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கிலும், அனைத்துலக ரீதியில் போட்டியிடும் தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும் அந்நாட்டின் மூன்று வங்கிகளை ஒருங்கிணைத்து ஒரே வங்கியாக உருவாக்கும் முடிவை நேற்று கூடிய இந்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

டேனா வங்கி (Dena Bank), விஜயா வங்கி (Vijaya Bank) ஆகிய இரண்டும் இனி பரோடா வங்கியுடன் (Bank of Baroda) இணைந்து ஒரே வங்கியாகச் செயல்படும்.

இந்த ஒருங்கிணைப்புகளைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது பெரிய வங்கியாக பரோடா வங்கி திகழும்.

#TamilSchoolmychoice

இந்த ஒருங்கிணைப்பு மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பணியாளர்கள் நிலை பாதிக்கப்படாது என்றும் யாரும் வேலை நிறுத்தம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் இந்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.