Home நாடு கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும்!- நஜிப்

கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும்!- நஜிப்

601
0
SHARE
Ad

பெக்கான்: ஜனவரி 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி கூட்டணி தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் என அக்கூட்டணியின் முன்னாள் தலைவர், டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 

மக்களின் தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டே தாம் அவ்வாறு நம்புவதாக அவர் கூறினார். கடந்த 14-வது பொதுத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளை அக்கூட்டணி நிறைவேற்றத் தவறி விட்டதாக நஜிப் கூறினார். இதனால், மக்கள் கவலைக் கொண்டிருப்பதாகவும், தேசிய முன்னணிக்கு சாதகமான வெற்றி கிட்டும் என அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரம் சுமுகமாக இயங்கினால், கேமரன் மலைத் தொகுதியை அக்கூட்டணி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கேமரன் மலை இடைத் தேர்தல் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில், நேற்று (வெள்ளிக்கிழமை), பகாங் மாநில ஜசெக கட்சியின் துணைத் தலைவர் எம்மனோகரனை, நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் அறிவித்தார்.

14- வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர் சி. சிவராஜ், 1954 தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் என, கடந்த ஆண்டு, ஜூன் 4-ஆம் தேதி மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்அதனைத் தொடர்ந்து தேர்தல் நீதிமன்றம், கேமரன் மலையில் சிவராஜின் வெற்றியை இரத்து செய்து, அத்தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டது.