Home இந்தியா திருவாரூர் இடைத் தேர்தல் இரத்து

திருவாரூர் இடைத் தேர்தல் இரத்து

795
0
SHARE
Ad

சென்னை – திருவாரூர் இடைத் தேர்தலை இரத்து செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடுத்திருந்த வழக்கை இன்று புதுடில்லி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருந்த நிலையில், அந்த இடைத் தேர்தலை தமிழக் தேர்தல் ஆணையமே முன்வந்து இரத்து செய்திருக்கிறது.

கஜா புயலினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பகுதியாக திருவாரூர் இருப்பதால் அங்கு நிவாரணப் பணிகள் நிறைவடைந்து நிலைமைகள் சரியாக இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என்றும், புயல், மழை காரணமாக 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் இப்போதைக்கு நடத்தப்படக் கூடாது என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருப்பதையும் கருத்தில் கொண்டு திருவாரூர் இடைத் தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்தது.

இதற்கிடையில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.