Home நாடு ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்!

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்!

656
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 99 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அரசு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாக நம்பப்படும் ஆடவரை, விசாரணைக்கு உதவும் பொருட்டு, நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நீதிமன்றத்திலிருந்து அனுமதிப் பெற்றது.

அதே வழக்கில் நேற்று, தனியார் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நீதிபதி இர்சா சுலாய்கா ரொஹானுடின் முன்னிலையில், இன்று புத்ராஜெயாவில், அந்த உத்தரவு வழங்கப்பட்டது .

#TamilSchoolmychoice

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5:50 மணியளவில், ஊழல் தடுப்பு ஆணையம், 64 வயதான முன்னாள் அரசாங்க நிறுவனத் தலைவரையும், அதற்கு முன்னதாக மாலை 5:20 மணியளவில், 32 வயது பெண் தலைமை நிருவாக அதிகாரி ஒருவரையும் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது.

2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், பதவியில் இருந்துக் கொண்டு, அரசு ஊழியருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.