Home கலை உலகம் ‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது!

‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது!

355
0
SHARE

 

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் தோற்றம் (First look Poster) வெளியிடப்பட்டது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன், இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஊழலுக்கு எதிராகப் போராடும் வீரராக, வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். சேனாபதி எனும் பெயரைக் கொண்டு, ஊழலுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டத்தைக் கதைக் களம் மையப்படுத்தியிருக்கும்.

தற்போது, இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று வெளியிட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணியாற்றுகிறார்.

இதற்கிடையே , பொங்கலை ஒட்டி இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை இப்படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் சேனாபதி பாத்திரத்தில் வர்மக்கலையை முன்னிறுத்தி காட்டுவது போல அமைந்திருக்கிறது. 

இந்தியன் படத்தின் முதல் பாகத்தில், இதே வர்மக்கலையை ஆயுதமாகப் பயன்படுத்திய கமல்ஹாசன், இரண்டாம் பாகத்திலும் இதனைக் கையில் எடுத்துள்ளது போல் இப்படம் தோற்றமளிக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments