Home நாடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கு மாநிலம் முழுதும் புகைபிடிக்கத் தடை!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கு மாநிலம் முழுதும் புகைபிடிக்கத் தடை!

729
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட்ட மாநிலமாக பினாங்கு, அடையாளப்படுத்தப்படும் என சுகாதாரம், வேளாண் மற்றும் வேளாண் தொழிற்துறை, பினாங்குகிராமமேம்பாட்டுத் தலைவர் டாக்டர்அபிப் பஹாருடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த நடைமுறை, சிகரெட் புகையில்லா பினாங்கு திட்டத்தின் (Program Pulau Pinang Bebas Asap Rokok) வழி, மக்களை இப்புகையின் ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காகச் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.

சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று உறுதிக் கொள்கிறோம். பொது இடங்களில் மற்றும் பூங்காக்களில் புகை பிடிக்காமல் இருப்பதற்கு போதுமான விழிப்புணர்வு திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்,” என்றும்அவர்கூறினார்.

#TamilSchoolmychoice

2012-ஆம் தொடங்கி, ஆயர் ஈத்தாம் அணை, தாமான் பெர்பண்டாரான், தாமான் பொத்தானி, தெலுக் பஹாங் அணை, தாமான் பண்டார் அம்பாங் ஜாஜார் மற்றும் மெங்குவாங் அணை ஆகிய இடங்களில் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.