Home நாடு செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் மார்ச் 2-இல் நடைபெறும்!

செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் மார்ச் 2-இல் நடைபெறும்!

675
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அஸிசான் ஹாருண் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதிமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பக்தியார் முகமட் மாரடைப்புக் காரணமாக காலமானதைத் தொடர்ந்து, இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் 14-வது பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட பக்தியார், அமனா நெகாரா கட்சியைச் சேர்ந்தவராவார். 23,428 வாக்குகள் பெற்று 8,964 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் அம்னோ வேட்பாளரை 14-வது தேர்தலில் தோற்கடித்தார்.

இதற்கிடையே, நேற்று (வியாழக்கிழமை), கேமரன் மலை இடைத் தேர்தலை அடுத்து, பாஸ் கட்சி செமினி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தகியுடின் ஹசான் கூறியிருந்தார். தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரிக்கும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெளிவுப்படுத்தியிருந்தார்.