Home நாடு அடிப்: கோயில் செயற்குழு மற்றும் 50 இந்தியர்களின் பங்களிப்பு தேவையற்றது!

அடிப்: கோயில் செயற்குழு மற்றும் 50 இந்தியர்களின் பங்களிப்பு தேவையற்றது!

1419
0
SHARE
Ad

கோலாலம்பூர்:தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையில், தங்களை சாட்சிகளாக ஏற்றுக் கொள்ள, விண்ணப்பித்த சீ பீல்ட் கோயில் செயற்குழு மற்றும் 50 இந்தியர்களின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிபதி ரொபியா முகமட் கூறுகையில், இவ்விரண்டு தரப்பினரின் ஈடுபாடும் இந்த விவகாரத்தில் உண்மையான கருத்தைக் கொண்டிருக்குமா என்ற நிலையும், தேவையற்றதாகவும் இருக்கும் பட்சத்தில் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

அவ்வாறு செய்தால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 377 விதிமுறைகளை மீறுவதாக அமையும் என அவர் மேலும் கூறினார்.

இவ்விரண்டு தரப்பினர்களையும் வழக்கறிஞர் சித்தி சாபிடா காசிம் மற்றும் எம். விஸ்வநாதன் பிரதிநிதித்தனர்.

இந்த விசாரணையானது பிப்ரவரி 11 முதல் ஏப்ரல் 12 வரை, சுமார் 44 நாட்களுக்கு நடத்தப்படும்.