Home நாடு 90 மில்லியன் நிதி விவகாரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்!- ஊழல் தடுப்பு ஆணையம்

90 மில்லியன் நிதி விவகாரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்!- ஊழல் தடுப்பு ஆணையம்

607
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து, 90 மில்லியன் ரிங்கிட் நிதியை பாஸ் கட்சிப் பெற்றது எனும் குற்றச்சாட்டில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எந்தவொரு ஊகத்தையும் வெளியிட விரும்பவில்லை எனவும், அதில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் எனவும் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் கூறினார். 

முதலில், அத்தொகையானது பாஸ் கட்சித் தலைவர்களால் பெறப்பட்டதா இல்லையா என்பதை ஊழல் தடுப்பு ஆணையம் கண்டறிய வேண்டி உள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக 1எம்டிபி நிதியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதியை, ஒரு சில பாஸ் கட்சித் தலைவர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளில் பெற்றதாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது என ஊழல் தடுப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்தது.